அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

0

இன்று தங்க விலை அதிரடியாக குறைந்து மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் ஏக குஷியில் உள்ளனர். நகை கடைகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்க படை எடுத்துள்ளனர்.

தங்கம் எனும் பொக்கிஷம்:

இந்தியாவில் மக்கள் தங்கத்தை ஒரு முதலீட்டு பொருளாக மட்டும் பார்ப்பது இல்லை. அதனை ஒரு மதிப்பாகவும் கருதுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்களை அலங்காரம் செய்து கொள்வதில் அளப்பரிய பிரியம் இருக்கும். இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியிலான ஆபரணங்களை அணிந்து கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படி முக்கியமாக கருதப்படும் தங்கத்தின் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படும், மக்களின் தேவை & முதலீடு மற்றும் தங்கத்தின் இருப்பை பொறுத்து விலை நிலவரங்களில் மாற்றம் ஏற்படும். இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து தங்க விலை குறைந்து கொண்டு தான் வருகின்றது. இன்றும் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு பவுனிற்கு 312 ரூபாய் குறைந்து 37,160 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரு கிராம் தங்கம் 39 ரூபாய் குறைந்து 4,645 என்ற விலையில் விற்கப்படுகிறது. தூய தங்கம் (24 கேரட்) தங்கத்தின் விலை ஒரு பவுனிற்கு இன்று 37,390 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘சீரியல் நடிகை சித்ரா மரணம் கொலை தான், ஆதாரம் உள்ளது’

தங்கத்தின் விலை இப்படி இருக்க, வெள்ளியின் விலை இன்று ஒரு கிராம் ரூ.69.10 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.69,100 என்று விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here