2024 ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

0
2024 ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!
2024 ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருவதை நாம் அறிவோம். ஆனாலும் இன்னும் ஒரு சில தேவைக்காக வங்கி கிளையை அணுக வேண்டிய சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக மாதந்தோறும் வங்கி விடுமுறை பட்டியல், முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறைகள்:

  • ஜூன் 8: மாதத்தின் 2வது சனிக்கிழமை, அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
  • ஜூன் 9: ஞாயிற்றுக் கிழமை, வங்கிகளுக்கு வழக்கமான வார விடுமுறை.
  • ஜூன் 15, 2024: மிசோரம் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க கலாச்சார கொண்டாட்டமான YMA தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு அன்று விடுமுறை. அதேபோல ஒடிசாவில் பருவமழையின் தொடக்கத்தைக் குறிக்கும் முக்கியமான விவசாயத் திருவிழாவான ராஜ சங்கராந்திக்கு வங்கிகள் மூடப்படும்.
  • ஜூன் 17, 2024: பக்ரித் என்று சொல்லப்படும் இஸ்லாமிய பண்டிகைக்காக மிசோரம், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தவிர இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்படும்.
  • ஜூன் 18, 2024: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் பக்ரித் பண்டிகை கொண்டாட வங்கிகள் மூடப்படும்.
  • ஜூன் 22: 4வது சனிக்கிழமை, அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
  • ஜூன் 23: ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு வழக்கமான வார விடுமுறை.
  • ஜூன் 30: ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு வழக்கமான வார விடுமுறை.

Enewz Tamil WhatsApp Channel 

TET தேர்வர்களே.. உங்களுக்கான சிறந்த “ONLINE COURSE”.. மிஸ் பண்ணிடாதீங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here