யுபிஎம்எஸ்பி 12 ஆம் வகுப்பு  தேர்வு ரத்து – உத்தர பிரதேச அரசு அதிரடி அறிவிப்பு!!!

0

குஜராத் போன்ற மாநிலங்கள் நேற்று 12ம் வகுப்பு பொது தேர்வுகளை ரத்து செய்ததை தொடர்ந்து, யோகி அரசு யுபிஎம்எஸ்பி 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்தது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

யுபிஎம்எஸ்பி 12 ஆம் வகுப்பு  தேர்வு ரத்து:

கோவிட் -19 தொற்றுநோயால் உத்திரப்பிரதேச மத்தியமிக் சிக்ஷ பரிஷத் (யுபிஎம்எஸ்பி) 2021ம் ஆண்டிற்கான யுபி 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்துள்ளதாக துணை முதல்வர் தினேஷ் சர்மா இன்று அறிவித்துள்ளார். இந்த உ.பி. வாரியம் 12 ஆம் வகுப்பு இடைநிலை தேர்வுகள் தொடர்பான முடிவுக்காக சுமார் 26 லட்சம் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

முன்னதாக உத்தரப்பிரதேச அரசு 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஜூலை  இரண்டாவது வாரத்தில் நடத்த இருந்தது. தற்போது 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், சிபிஎஸ்இ போன்ற 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை யுபி வாரியம் ரத்து செய்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் போன்ற பல மாநிலங்கள் தங்களது 12 ஆம் வகுப்பு தேர்வு வாரியங்களை ரத்து செய்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பரீட்சைகளை ரத்து செய்வதற்கான முடிவு மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ளது என்றும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உள்ள கவலையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here