‘டீன் ஜோன்ஸ் முதல் கேத்தன் சவுகான் வரை’ – இந்தியாவை அதிரவைத்த விளையாட்டு பிரபலங்களின் மரணம்!!

0

இந்த கொரோனா காலத்தில் விளையாட்டு போட்டிகள்  அதிகமாக நடைபெறவில்லை. அதனால் மக்கள் மிகவும் சோகமாக உள்ளனர். மேலும் இந்த ஆண்டில் முக்கிய விளையாட்டு வீரர்கள் பலர் மரணம் அடைந்துள்ளனர். இது ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டீன் ஜோன்ஸ் :

இவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவர். அவர் ஆஸ்திரேலிய அணிக்காக பல டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ளார். இவர் 52 டெஸ்ட் போட்டிகளிலும் 164 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் 1990 காலங்களில் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நடந்து முடிந்த ஐபில் 2020 போட்டிகாக கமெண்ட்ரி செய்வதற்கு இவர் மும்பை வந்துள்ளார். இங்கு வந்த அவர் ஹோட்டலில் தனது அறையில் இருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடைசி நேரங்களில் பிரெட் லீ அவரை காப்பாத்துவதற்கு மிகவும் முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுனி கோஸ்வாமி :

இவர் இந்தியாவின் முதல் கால்பந்து சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். இவர் கால்பந்தில் மட்டும் சிறந்தவர் அல்ல,கிரிக்கெட்டும் அருமையாக ஆடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய கால்பந்து  அணியின் முன்னாள்  கேப்டன் ஆவர்.

1962 இல் நடந்த ஆசிய போட்டியில் இந்தியா அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 30 அன்று மரணம் அடைத்தார். இது  அனைவர்க்கும் பெரும்  வருத்தத்தை ஏற்படுத்தியது. இவர் 80 வயதில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டியோகோ மாரடோனா :

இவர் அர்ஜென்டினா அணியின் முன்னாள் கால்பந்து வீரர். இவரின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும். இவரை கண்டே பலர் கால்பந்து விளையாட முன் வந்துள்ளார்கள் என்றே கூறலாம்.

ஆஸ்திரேலிய அணிக்கு கிறிஸ்துமஸ் பரிசு கொடுக்கும் இந்தியா – சுனில் கவாஸ்கர் விமர்சனம்!!

நூற்றாண்டிற்கான சிறந்த பிபா கால்பந்து வீரரை தேர்வு செய்வதற்கு இணையத்தில் ஒரு போட்டி நடந்தது. அதில் இவர் பெயர் தான் முதலில் வந்தது அதற்கான பரிசையும் பெற்றார். இவர் கடந்த நவம்பர் மாதம் 25 அன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு 60 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

கோப் பிரையன்ட் :

இவர் அமெரிக்கா நாட்டின் கூடைப்பந்து ஆட்டக்காரர். இவர் அந்த அணிக்காக மிகவும் சிறப்பாக விளையாடி 5 முறை NBA சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  இவர் தனது வாழ்க்கையில் 20 வருடம் கூடை பந்து போட்டி விளையாடியுள்ளார்.

அவர் மற்றும் அவரது 13 வயது மகள் கடந்த ஜனவரி மாதம் 26 அன்று விமானத்தில் சென்றனர். அப்போது அந்த விமானம் திடீரன்று வெடித்ததில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்தனர். இது அந்த நாட்டையே அதிர்ச்சியடைய செய்தது.

கேத்தன் சவுகான் :

இவர் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்  ஆவர்.  இவர் இந்தியா அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் ராஞ்சி போட்டியில் இவர்  மகாராஷ்டிரா மற்றும்  டெல்லி அணிக்காக விளையாடியுள்ளார்.

அவர் உத்திர பிரதேச அரசில் அமைச்சராக பணியாற்றி வந்தார். அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இவர் கொரோனாவால் பாதிக்க பட்ட முதல் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here