ஆன்லைனில் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் – தமிழக அரசு அறிவிப்பு

0

கொரோனா பாதிப்பால் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் முடிந்தும் நீட் வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது. அதை தொடர்ந்து 2019 – 2020 காண நீட் வகுப்புகள் ஜூன் 15 முதல் தொடங்க உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நீட் தேர்வு

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்காக நீட் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. 2017 ஆம் ஆண்டு இந்த நீட் தேர்வுகள் நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த நீட் தேர்வுகள் மதிப்பெண்களை வைத்தே மருத்துவ படிப்பின் சேர்க்கை நடைபெறுகிறது. 2017-2018 கல்வி ஆண்டுகளில் இலவச நீட் தேர்விற்கான பயிற்சி மாயன்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். 2019 – 2020ம் கல்வி ஆண்டுக்கான நீட் பயற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 412 மையங்களில் நடத்தப்பட்டு வந்தன.

From this year, common NEET question paper for all languages ...

இந்த பயிற்சி மையங்கள் வார இறுதி நாட்கள் மற்றும் காலாண்டு அரையாண்டு தேர்வுகள் விடுமுறையில் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் கடந்த ஜனவரி மாதம் அரசு நிறுத்தி வைத்தது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுக்கான செய்முறை தேர்வு தொடங்கி இருப்பதாலும், விரைவில் பொது தேர்வுகள் வர இருப்பதால் நீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் நிறுத்திவைக்கப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்தது.

2019-2020

இதற்கிடையே, கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தும் நீட் தேர்விற்கான வகுப்புகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளதால், 2019-2020 ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மூலம் விவரங்களை தெரிவிக்குமாறு முதன்மை கல்வி அலுவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Indian students in UAE demand local NEET exam centres

ஆன்லைன் நீட் பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் நீட் தேர்வுக்க இணையவழியில் இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இலவச நீட் பயற்சி வகுப்புகளில் பயின்ற மாணவர்களில் கடந்த 2017 – 2018ம் கல்வி ஆண்டில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை. 2018 – 2019ம் ஆண்டில் 5 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here