2017-18 ஆம் கல்வியாண்டு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் – சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!!

0

2017-2018 ஆம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கொண்டு வந்தார்.

கவன ஈர்ப்பு தீர்மானம்:

தமிழக சட்டப்பேரவை நேற்றைய விடுமுறைக்கு பின் மறுபடியும் இன்றைக்கு முதல்வர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் கூடியது.  இதில், துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் சார்பாக விவாதங்கள் தொடங்கியது.  இதற்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் விளக்கம் அளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இது மட்டுமல்லாமல், இன்றைக்கு சில முக்கிய கவன ஈர்ப்பு தீர்மானம் துறை அமைச்சர்களால் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது. இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில், சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்த விரிவான தகவல் அறிக்கை வெளியிடப்பட்டது.  இதில் குறிப்பிடத் தகுந்த வகையில், மூன்று மாவட்டங்களில் சுற்றுலாத்துறையால் ஹெலிகாப்டரில் பயணிகள் பயணம் செய்யும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தமிழரின் பண்பாட்டு புராதன சின்னமாக உள்ள பூம்புகார் கடற்கரை மேம்பாடு செய்ய உள்ளதாகவும் அறிவித்தார்.  இது சுற்றுலா பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, இன்றைக்கு நடந்த பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன் மொழிந்தார்.

இதுவரை, வழங்கப்படாமல் உள்ள 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான இலவச மடிக்கணினிகள் விரைவில் வழங்கப்படும் என்றும், கடந்த 2017-18 ஆம் ஆண்டு +2 முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதுவரை சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இந்த பணிகள் முடிந்து விட்டதாகவும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here