தமிழக ரேஷன் கடைகளில் ரூ.2,000 மறுப்பா?? அதிரடியாக வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெற இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (மே 23) முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். முன்னதாக 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை போது பொதுமக்கள் மிகவும் அவதி பட்டனர். இம்முறை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாலும், டிஜிட்டல் பரிவர்த்தனை பெருமளவில் பயன்படுத்தப்படுவதாலும் முன்பு போல் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதிலும் வணிக வளாகங்களில் நுகர்வோர்களிடம் எப்போதும் போல் ரூ.2,000 நோட்டுகளை வாங்கி கொள்ளலாம். அதனை தங்களது வங்கிகளில் ஒரு நாளைக்கு ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம். அதற்கு மேல் மாற்றுபவர்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பேருந்துகளில் நாளை முதல் ரூ.2,000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கோபத்தில் வார்த்தையை விட்ட விஜய்., 16 வருடத்திற்கு பிறகு வன்மத்தை கக்கும் பிரபலம்., லீக்கான தகவல்!!

இதன் காரணமாக சில ரேஷன் கடைகளில் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படுவதில்லை என புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது ரேஷன் கடைகளில் வழக்கம் போல் ரூ.2,000 நோட்டுகளை வாங்க வேண்டும். செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரூ.2,000 நோட்டு செல்லும் என்பதால் ரேஷன் கடை ஊழியர்கள் மறுப்பு தெரிவிக்காமல் வாங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here