20 % இட ஒதுக்கீடு வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை !!

0

வன்னிய சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக பா.மா.க.,வினர் சென்னையில் இன்று போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் மிக மிக பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். வேலையிலும், கல்வியிலும் 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.மா.க இளைஞரணி தலைவரும், ராஜ்யசபா எம்பி யுமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள் :

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி சென்னையில் இன்று பா.மா.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் பல ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். பா.மா.கவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பா.மா.கவினர் இரயில்களை மறித்து, அதன் மீது கற்களை வீசி போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில், பா.மா.க இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து, இட ஒதுக்கீட்டிற்கான மனு அளித்துள்ளார். மேலும், அவர் இந்த போராட்டம் எந்த அமைப்பிற்கு எதிராகவோ, அரசியல் கட்சிக்கு எதிராகவோ நடக்கும் போராட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் சமூக நீதிக்கான போராட்டம் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். வன்னியர்கள் வளர்ச்சியை மேம்படுத்த 20% கல்வியிலும்,வேலையிலும் ஒதுக்குமாறு முதல்வருக்கு மனு அளித்துள்ளளோம் அவரும் அது சம்பந்தமாக நல்ல முடிவு எடுப்பதாக கூறினார் எனவும், பா.மா.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here