TNPSC தேர்வில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு – மதுரை கிளை நீதிமன்றம் அதிரடி!!

0

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை கிளை உயர்நீதிமன்றம்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் அனைத்து தரப்பு தேர்வுகளும் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்பு கடந்த ஆண்டு இறுதியில் அனைத்து தரப்பு அரசு தேர்வும் நடைபெற்று வந்தது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பள்ளிகளில் தமிழில் பயின்று வந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு சற்று அதிகமாக கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுதொடர்ந்து தற்போது மதுரை கிளை உயர் நீதிமன்றம் அதிரடியாக ஓர் தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதனால் தமிழில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இதுகுறித்து நீதிமன்றம் கூறியதாவது, பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழில் பயிலும் மாணவர்களுக்கு 20 சதவீத கட்டாயமாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமே என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.

சொந்தமாக சமூகவலைத்தளங்களை ஆரம்பிக்க இருக்கும் டிரம்ப் – இணையத்தில் கசிந்த தகவல்!!

மேலும் இதனை சான்று வழங்கும் பொழுது தமிழ் பயிலும் மாணவர்கள் என்று கட்டாய முறையில் குறிப்பிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த இட ஒதுக்கீட்டில் இடம் பெரும் மாணவர்களிடம் முறையான சான்றுகளை கவனமாக சரிபார்த்து பெறவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது இந்த அறிவிப்பினால் தமிழில் பயிலும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here