உலகக் கோப்பை யுத்தத்திற்கு இன்னும் 2 மாதங்கள்…,பயிற்சியில் தீவிரம் காட்டும் அணிகள்!!

0
உலகக் கோப்பை யுத்தத்திற்கு இன்னும் 2 மாதங்கள்...,பயிற்சியில் தீவிரம் காட்டும் அணிகள்!!
உலகக் கோப்பை யுத்தத்திற்கு இன்னும் 2 மாதங்கள்...,பயிற்சியில் தீவிரம் காட்டும் அணிகள்!!

ஐசிசி சார்பாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒருநாள் உலக கோப்பை தொடர், இந்தியாவில் அக்டோபர் மாதம் 5 ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற்றுள்ளன. இதில், ஒரு அணி மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை மோத உள்ளது. இதன் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த அரையிறுதி சுற்றுகளானது, நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதி காலத்தில் மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, இறுதிப் போட்டியானது நவம்பர் 19 ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு இன்னும் சரியாக இரண்டு மாதங்களே உள்ள நிலையில், 10 அணிகளின் கேப்டன்களும் கோப்பை முன் நின்று இருக்கும் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பையை வெல்ல இந்திய அணி போடும் மாஸ்டர் பிளான்…, வெளியான முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here