2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் – இன்று தமிழகம் வருகை!!

0

ஏப்ரல் 21-ந்தேதி முதல் மே மாதம் 16-ந்தேதி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்துகளின் விவரங்களை மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. அதன் படி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 2 லட்சம், ‘ரெம்டெசிவிர்’ மருந்து பாட்டில்கள் இன்று தமிழகம் வருகின்றன.

கொரோனா இரண்டாவது அலை:

தமிழகத்துக்கு 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் விற்பனை இல்லை. அரசு சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதிலும் இருந்து மருந்து வாங்க சென்னைக்கு படையெடுத்தனர்.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் பொதுமக்களின் நலன் கருதி இன்று தமிழகம் வருகின்றன. மாநிலத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ரெம்டெசிவிர் விற்கப்பட்டதால் கூட்டம் அலை மோதியது. பலர் விடிய விடிய காத்திருந்து வாங்கி சென்றனர்.

ரெம்டெசிவிர் குப்பின் விலை:

ஒரு நோயாளிக்கு செலுத்தப்படும் ஆறு ரெம்டெசிவிர் குப்பி மருந்துகள் 9,408 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது . இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக இன்று முதல் சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 5 இடங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இதனால் சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று கூட்டம் வெகுவாக குறைந்தது.

இன்று தமிழகம் வரும் 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் தமிழ்நாடு மருத்துவப் பணி கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்பு அவை சில நாட்களில், விற்பனை செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here