34 பேரின் +2 தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு.., ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்.., வெளியான ஷாக் தகவல்!!!!

0
34 பேரின் +2 தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு.., ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்.., வெளியான ஷாக் தகவல்!!!!
34 பேரின் +2 தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு.., ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்.., வெளியான ஷாக் தகவல்!!!!

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற்ற +2 பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மொத்தம் 8,03,385 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் அதில் 7,55,451 தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் இந்த தேர்வில் 47,934 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதால் அவர்களுக்கான துணை தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் பொதுத்தேர்வை எழுதிய 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உதகை சாம்ராஜ் பள்ளியில் பயின்ற மாணவர்களில் 34 பேர் கணித தேர்வு எழுதும் போது ஆசிரியர்கள் உதவியதாக குற்றசாட்டுகள் எழுந்தது.

1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டம்., மாநில முதல்வர் பரபரப்பு!!!

இதனை விசாரித்த தேர்வுத்துறை இவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மாணவர்களுக்கு உதவிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த 34 பேரின் தேர்வு தாள் தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு பின் மதிப்பெண் குறித்த விவரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here