தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் – பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு!!

0

அண்மையில் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தர கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

வீட்டு பாடம் ரத்து:

தமிழ் நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல நலத்திட்டங்களை கொண்டு வந்து உள்ளது. அந்த வரிசையில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை அமல்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு வீட்டு பாடம் தர கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும், சென்னை உயர்நீதிமன்றம் வீட்டுப் பாடம் தர தடை விதித்துள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. ஏனென்றால் சில பள்ளிகளில் உத்தரவை மீறி வீட்டு பாடங்கள் தருவதாக சில தகவல் வெளியாகி வந்ததால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு பள்ளிக்கும் பறக்கும் படை வைத்து ஆய்வு செய்து, ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தராமல் இருப்பது உறுதி செய்து தர வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here