தேங்காய் சைஸில் சிறுநீரக கல்.. 17 வயது சிறுவன் வயிற்றிலிருந்து அகற்றம்!!!

0

கொல்கத்தாவை சேர்ந்த 17 வயது சிறுவன் வயிற்றிலிருந்து தேங்காய் சைஸில் சிறுநீரக கல் ஒன்று தற்போது வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்த மும்பையை சேர்ந்த மருத்துவருகளுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த ரூபன் ஷேக்கா என்ற 17 வயது சிறுவன், பிறக்கும் போதே  Exposed Urinary Bladder என்ற குறையுடன் பிறந்துள்ளான். மிகவும் அரிதான நிலையில் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இது போன்ற குறை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு பிறந்தவர்கள் சரியாக சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஏற்படும்.

இந்நிலையால் ரூபன் ஷேக்கா என்ற அந்த சிறுவனின் சிறுநீர் பையில் சிறுநீரக கல் உருவாகியுள்ளது. இதனால் அவதிப்பட்டுள்ள அச்சிறுவனுக்கு டாக்டர் ராஜீவ் ரெட்கர் மற்றும் டாக்டர் அஸ்மிதா மகாஜன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மேலும் அந்த சிறுவன் ஆசிரமத்தில் வளர்வதால் இரக்க மனதுடன் இலவசமாகவே அவன் வயிற்றில் இருந்த கிட்டத்தட்ட 1 கிலோ எடை கொண்ட சிறுநீரக கல்லை சிகிச்சை செய்து எடுத்துள்ளனர். அந்த மருத்துவருகளுக்கு இந்த தகவலை அறிந்த அனைவரும் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர் .

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here