எதுவும் என் தாய்நாட்டிற்கே..! நாசா அழைப்பை நிராகரித்த இளம் இந்திய விஞ்ஞானி..!

0

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி கோபால்ஜி இன் கண்டுபிடிப்புகளை பார்த்து அவருக்கு அழைப்பு விடுத்தது ஆனால் அதனை அந்த 19 வயது இளைஞர் நிராகரித்து விட்டார்.

அறிவியல் கண்டுபிடிப்புகளில் அசத்தும் கோபால்ஜி..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

19 வயதான கோபால்ஜி பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள துருவ்கஞ்ச் கிராமத்தை சேர்ந்தவர். இவர் பி.டெக் படித்து வருகிறார். இவருக்கு சிறு வயது முதலே அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் இருந்து உள்ளது. இவர் 10ம் வகுப்பு படிக்கும் போதே வாழைஇலை மற்றும் காகிதத்தில் இருந்து பயோ செல்லினை பிரித்தெடுத்து சாதனை படைத்தவர். இதற்காக அவருக்கு இன்ஸ்பையர் விருதும் வழங்கப்பட்டது.

மோடி பாராட்டு..!

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தைவான் நாட்டின் தலைநகர் தைபேவில் நடைபெற்ற கண்காட்சியில் இவர் தனது கண்டுபிடிப்புகளை பார்வைபடுத்தினார். இதனை பார்த்து வியந்த உலகின் பல நிறுவனங்கள் இவருக்கு அழைப்பு விடுத்தன. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2017ம் ஆண்டு இவரை நேரில் அழைத்து வாழ்த்தினர். இதற்கு பின் இவர் அகமதாபாத்தில் உள்ள ‘நேஷனல் இன்னொவேஷன் பவுன்டேஷனுக்கு’ அனுப்பப்பட்டார். அங்கு இவர் புதிதாக 34 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அதில் இரண்டிற்கு காப்புரிமையும் பெற்றார்.

நாசா அழைப்பு..!

கோபால்ஜியின் உயர் வெப்பநிலையை தாங்கும் ‘கோபோனியம் அலாய்’ கண்டுபிடிப்பு குறித்து அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இவருக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் இவர் எதுவாக இருந்தாலும் எனது தாய்நாட்டிற்கு தான் என்று அந்த அழைப்பை நிராகரித்து விட்டார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here