18 வயதிற்கு மேற்பட்டவர்காளுக்கான கொரோனா தடுப்பூசி – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!!

0

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை குறைப்பதற்காக மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசி

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் நாட்டில் கொரோனா தடுப்பூசி பணிகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தகுதியுடைய அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியளர்கள் போன்றவர்களுக்கு போடப்பட்டது. பின்பு 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் நாட்டில் வருகிற மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

தற்போது அதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி மையங்களில் மட்டுமே போடப்படும். தடுப்பூசியை செலுத்த விரும்புபவர்கள் https://www.cowin.gov.in/home என்ற இணையதளத்தில் சென்று பதிவு மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவாக்சின் ரூ.1,200 மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ரூ.600 கட்டணம் விதிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here