ஏ.டி.எம் வடிவில் நவீன முறையில் வீடு தேடிவரும் வாக்காளர் அட்டை!!!

0
ஏ.டி.எம் வடிவில் நவீன முறையில் வீடு தேடிவரும் வாக்காளர் அட்டை!!!
ஏ.டி.எம் வடிவில் நவீன முறையில் வீடு தேடிவரும் வாக்காளர் அட்டை!!!

இந்திய நாட்டில் 18 வயதை பூர்த்தி செய்த ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க உரிமை மற்றும் கடமை இருக்கிறது. இந்த நேரத்தில் இதன் அவசியத்தை வளர்ந்து வரும் இளம் சமுதாயத்திற்கு அவ்வபோது அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் இதற்கான தேர்தல் வேலைகளை ஒவ்வொரு மாநில அரசும் தொடங்கியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில் தற்போது தமிழகத்தின் கோவையில் உள்ள வாக்காளரின் எண்ணிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு, முகவரி மாற்றமாகி சென்றுள்ள 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரட்டை வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஜனவரி 1 ஆம் நாள் நடத்தப்பட்ட வாக்காளர் தகுதி நாள் கொண்டாட்டத்தின் போது கோவையில் 58888 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முட்டை ஆம்ப்லேட் சாப்டருப்பீங்க.., சிக்கன் 65 ஆம்ப்லேட் சாப்ட்ருக்கீங்களா?? சூப்பர் ரெசிபி இதோ!!


இந்த நிலையில் இவர்களில் 17 ஆயிரம் பேருக்கும் முதற்கட்டமாக, ஏ.டி.எம் வடிவில் ”ஹாலோ கிராம்” ஸ்டிக்கருடன் நவீன முறையில் அச்சிடப்பட்ட புதிய வாக்காளர் அட்டை தபாலில் அவரவர் வீட்டிற்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இடம் மாறுதலாகி போன வாக்காளரின் அட்டைகள் மாவட்ட கலெக்டர் தேர்தல் அலுவலகத்திற்கு திரும்பி வந்துள்ளது. மேலும் இவை அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு, வாக்காளரின் தொலைபேசிக்கு தொடர்புக்கு அவர்களிடம் கொடுக்கப்படும் என்ற தகவல் அரசு தரப்பிடம் இருந்து கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here