ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் 2022: தங்கப்பதக்கங்களை குவிக்கும் பெண்கள் படை!!

0
ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் 2022: தங்கப்பதக்கங்களை குவிக்கும் பெண்கள் படை!!
ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் 2022: தங்கப்பதக்கங்களை குவிக்கும் பெண்கள் படை!!

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் தொடருக்கான, ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கப்பதக்கத்தை வென்றதை தொடர்ந்து, இந்திய பெண்களும் தங்களது பதக்க எண்ணிக்கை தொடங்கியுள்ளனர்.

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப்:

ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் தொடரின் 15 வது சீசன் கடந்த 9ம் தேதி முதல் தென் கொரியாவில் உள்ள டேகுவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்ககளை குவித்த நிலையில், தற்போது 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவருக்கான பிரிவில் இந்தியாவின் சிவ நர்வால் தங்கப் பதக்கத்தையும், விஜய்வீர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார். இவர்கள் வரிசையில், இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்களுக்கான ஜூனியர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் 17 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இவருக்கு அடுத்தாக இந்தியாவின் இஷா சிங் 15 புள்ளிகளை பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளார்.

வாட்ஸ் ஆப்பில் வந்தாச்சு புது அப்டேட்.., உங்க நம்பர்  இனி  மிஸ்யூஸ்  ஆகாது.., அதுலயும்  இப்படி  ஒரு  ட்விஸ்ட் இருக்கு!!

இதில், சீனியர் பிரிவில், இந்தியாவின் ரிதம் சங்வான் 16 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இவர்களை போல, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆண்களுக்கான ஜூனியர் பிரிவில் இந்திய அணியின் சாகர் டாங்கி, சாம்ராட் ராணா மற்றும் வருண் தோமர் ஆகியோர் உஸ்பெகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக போட்டியிட்டனர். இதில், 16-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு முன்னிலை பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here