
தமிழகத்தில் வருடந்தோறும் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் கடந்த மாதம் 27ம் தேதி திருத்த பணிகள் தொடங்கியது. இதில் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் பிழைகள் திருத்தம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி கடந்த 27ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 15,187 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடு வாழ் வாக்காளர் பெயர் சேர்க்க இதுவரை 5 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அதே போல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஆயிரத்து 914 பேரும், திருத்தம் செய்ய 19,036 பேரும் விண்ணப்பித்துள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 நாள் தொடர் விடுமுறை.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!