திருப்பதி கோவிலில் நடந்த அதிசயம் – 5 நிமிடங்களில் நிகழ்ந்த சாதனை! பரவசத்தில் பக்தர்கள்!!

0
திருப்பதி கோவிலில் நடந்த அதிசயம் - 5 நிமிடங்களில் நிகழ்ந்த சாதனை! பரவசத்தில் பக்தர்கள்!!
திருப்பதி கோவிலில் நடந்த அதிசயம் - 5 நிமிடங்களில் நிகழ்ந்த சாதனை! பரவசத்தில் பக்தர்கள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விற்பனை செய்யப்படும், அக்டோபர் மாதத்திற்கான டிக்கெட்டுகள் குறித்த தகவல்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

அங்க பிரதட்சண டிக்கெட்டுகள்:

கொரோனா காரணமாக கடந்த 2020 மார்ச் 20ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவைகளில் பங்கு பெறவும் மற்றும் அங்கபிரதட்சணம் செய்வதற்கும் அனுமதி இல்லாமல் இருந்தது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அங்கப்பிரதட்சணம் செய்யவும், கட்டண சேவைகளில் பங்கு பெறவும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் அடிப்படையில் திருப்பதியில் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள், அங்க பிரதட்சணம் செய்வதற்குரிய டோக்கன்கள், ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆகியவற்றை நேற்று மற்றும் இன்று திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. அதாவது நவம்பர் மாதம் 300 ரூபாய் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபடுவதற்கு தேவையான டிக்கெட்டுகளை நேற்று காலை 9 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

விருப்பமே இல்ல., வற்புறுத்தி இப்படி பண்ண வச்சுட்டாங்க – நடிகை பிரியாமணி பகிரங்க புகார்!!

இந்த வகையில் இன்று காலை 9 மணிக்கு (அக்டோபர்) அடுத்த மாதத்திற்கான அங்க பிரதட்சண டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இன்று ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிட்ட 5 நிமிடங்களில், 1,500 டிக்கெட்டுகள் திருப்பதி பக்தர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருப்பதியில் அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுவதையொட்டி, அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை அங்க பிரதட்சண சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here