சீன செயலிகள் மூலம் 150 கோடி மோசடி

0

சீன செல்போன் செயலிகள் மூலம், 2 மாதத்தில் 5 லட்சம் இந்தியர்களிடமிருந்து 150 கோடி ரூபாய் சுருட்டிய கும்பலை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன செயலிகள்:

கடந்த ஆண்டு சீன செயலிகள் முடக்கப்பட்டது பெரும் வாதத்திற்குரிய பேச்சாக இருந்து வந்தது. தற்போது ஆன்லைன் பயனர்கள் அதிகமாக இருப்பதால் ஆன்லைன் மோசடிகளும் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. தற்போது ஆன்லைன் மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில், உடனடி வருவாய், இரு மடங்கு ஆதாயம் என இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த Power Bank, EZPlan, EZCoin, Sun Factory, Lightening Power Bank உள்ளிட்ட செயலிகளை நம்பி, 300 ரூபாயில் இருந்து பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர் பயனர்கள்.


அதிலும் Power Bank ஆப், கூகுள் பிளே ஸ்டோரில், டிரென்டிங்கில் 4ஆம் இடத்திற்கும் வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் Power Bank, EZPlan குறித்து பரப்பப்பட்டதால் டெல்லி சைபர் கிரைம் போலீசார் அதுபற்றி ஆய்வு நடத்தியபோது, சீனாவை சேர்ந்த சர்வரில் இருந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவ்வாறு மோசடி செய்யப்பட்டு திரட்டப்பட்ட பணத்தை அனுப்ப நூற்றுக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பெயரில் வங்கிக் கணக்குகளும் செயல்பட்டுள்ளன. இதற்கு உடந்தையாக இருந்த 2 சார்ட்டடு அக்கவுன்டன்டுகள், ஒரு திபெத்திய பெண் உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ள போலீசார், வங்கிக் கணக்குகளில் 11 கோடி ரூபாயை முடக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here