15 வயது மாணவனின் உயிரை பறித்த ப்ரீபயர் கேம் – நெல்லையில் நடந்த சோகம்!!

0

தனது போனில் அடிக்கடி ப்ரீ பயர் கேம் விளையாடிய கல்லூரி மாணவனை பெற்றோர் திட்டிய காரணத்தால், அந்த மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவர் தற்கொலை:

நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை அருகே மன்னார்புரம், இந்திரா நகரில் வசித்து வருபவர் வள்ளிமயில்.  இவரது மூத்த மகன் 15 வயதுடைய சஞ்சய், மன்னார்புரம் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.  இந்த மாணவர் தனது பெற்றோர் ஆன்லைன் வகுப்பு கவனிக்க வாங்கி கொடுத்த மொபைல் போனில் அடிக்கடி ப்ரீ பயர் கேம் விளையாடியுள்ளார்.

இதையடுத்து, தனது பெற்றோர் திட்டிய காரணத்தால், மனமுடைந்த சஞ்சய் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here