ஐபிஎல்லில் விராட் கோலி, RCB அணியுடன் இணைந்து 15 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து, இவரது வாழ்க்கையை மாற்றிய தருணம் குறித்த பதிவு வைரலாகி வருகிறது.
விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும், RCB அணியின் கேப்டனாகவும் விராட் கோலி தனது பங்களிப்பை அளித்து வருகிறார். இவர், இந்தியாவின் ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008 ஆம் ஆண்டு முதல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்காக விளையாடி வருகிறார். இந்த RCB அணியில் இணைந்து விராட் கோலி 15 வருடங்கள் நிறைவடைந்ததே, அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில், இவரது தந்தை இறந்த பிறகு, தனது வாழ்க்கையை மாற்றிய தருணத்தை குறித்து விராட் கோலி RCB அணியிடம் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது. விராட் கூறியதாவது, அனுஷ்கா சர்மாவை சந்தித்தது தான் என் வாழ்க்கையை மாற்றிய தருணம் என்று கூறியுள்ளார். மேலும், வாழ்க்கையின் புதிய கண்ணோட்டத்தை, அதாவது, காதலிக்கும் போது தான் பல விஷயங்களை ஏற்று கொள்ள வேண்டி கற்றுக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.
சச்சின், ராகுல் டிராவிட் வரிசையில் இணைந்த புஜாரா…, டெஸ்டில் 2000 ரன்களை கடந்து அசத்தல்!!
ஐபிஎல் வரலாற்றில், RCB அணியானது, ஒரு முறை கூட பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், தலா மூன்று முறை 2 மற்றும் 3 வது இடத்தை பிடித்து எதிரணிகளுக்கு அதிக நெருக்கடியை கொடுத்துள்ளது. மேலும், மக்களால், அதிகம் விரும்பப்படும் அணியாக RCB அணி வலம் வருகிறது.
Virat talks about how his life changed after meeting Anushka Sharma on @eatsurenow presents #RCBPodcast! 💖#PlayBold @imVkohli @danishsait pic.twitter.com/90JHI5ESkr
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 9, 2023