பிரபல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.,,15% வரைக்கும் சம்பள உயர்வு!!

0
பிரபல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.,,15% வரைக்கும் சம்பள உயர்வு!!
பிரபல தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.,,15% வரைக்கும் சம்பள உயர்வு!!

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம், தனது ஊழியர்களுக்கு 15% சம்பள உயர்வை வழங்க உள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பள உயர்வு:

சமீப காலமாக TCS, HCL, wipro உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைத் தக்க வைத்து கொள்ள சம்பள உயர்வு மற்றும் போனஸ் உள்ளிட்டவைகளை வாரி வழங்குகிறது. மேலும் கொரோனாவின் வருகைக்கு பின் விப்ரோவில் பணியமர்த்தல் என்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்த சமயத்தில் நிறுவனம் அட்ரிஷன் பிரச்சனையையும் எதிர்கொண்டது. மேலும் அட்ரிஷன் விகிதத்தினை குறைக்கவும், ஊழியர்களை தக்கவைத்து கொள்ளவும், ஒவ்வொரு காலாண்டிலும் பதவி உயர்வை வழங்க உள்ளதாக அறிவித்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Wipro Employees Resume Work Today After 18 Months as Indian Tech Giants Start Work from Office

அதன்படி செப்டம்பரில் பெரும்பாலான ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வை வழங்க திட்டமிட்மிட்டுள்ளதாகவும், சிறப்பான செயல்திறனை காட்டுபவர்களுக்கு 15% மேலாக சம்பள உயர்வினை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தது. இதன் அடிப்படையில் விப்ரோ (wipro)நிறுவன ஊழியர்களுக்கான சம்பள உயர்வு (செப்டம்பர்) இந்த முதல் அமலுக்கு வர உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு இல்லை? முடிவிலிருந்து திடீரென பின்வாங்கிய அரசு!!

இந்த சம்பள உயர்வை உறுதிப்படுத்தும் விதமாக ஊழியர்களுக்கு, இன்னும் ஒரு சில நாட்களில் மேலாளரிடம் இருந்து MSI கடிதம் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விப்ரோவின் இந்த சம்பள உயர்வு 96% பணியாளர்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here