ஜூன் 30 வரை 144 தடை உத்தரவு – மாநில அரசு அதிரடி உத்தரவு!!

0

உலகம் முழுவதையும் ஆட்டி படைத்த நோய்த்தொற்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இதனால் பல இறப்புகள் நேர்ந்த நிலையில் உத்திரபிரதேசத்தில் கவுதம புத்த நகரில் 144 தடை ஜூன் 30 வரை நீடித்துள்ளது.

144 தடை:

நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்.இதன் மூலம் பொது மக்கள் அந்த பகுதிக்கு வராமல் தடுக்கலாம். இதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கலாம் என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

ஆனால் எதிர்பாராத விதமாக நோய்த்தொற்று தீவிரமாக பரவியதனால் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.இருப்பினும் ஊரடங்கு காலத்திலும் கொரோனா பரவல் விகிதம் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இது போல உத்திரபிரதேசம் மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகமாக காணப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிலும் குறிப்பாக கவுதம புத்த நகரில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நோய் பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்த நிலையில் கவுதம புத்த நகரில் 144 தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது கவுதம புத்த நகரில் 144 தடை சட்டம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here