கொரோனா நோய்த்தொற்று தீவிரம் – 144 தடை உத்தரவை பிறப்பித்த மாவட்ட ஆட்சியர்!!

0

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியார், மாவட்டத்தில் அதிரடி நடவடிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

தென்காசி மாவட்டம்:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று, ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை வசதியின்மை ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அனைத்து தரப்பு அதிகாரிகளும் மிக விரைவாக பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது பொதுமக்கள் ரெம்டெசிவர் மருந்தினை வாங்க சென்னையில் கூட்டம் கூட்டமாக அலை மோதி வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மக்களின் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் நெல்லை, கோவை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டத்தில் ரெம்டெசிவர் மருந்தினை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, இதுபோன்ற பல பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் கடந்த சில தினங்களாகவே தென்காசி மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது தென்காசி மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பெட்ரோல் மற்றும் டீசலின் இன்றைய விலை – வாகன ஓட்டிகள் ஆறுதல்!!

அதன்படி ஆட்சியர் சமீரன் தெரிவித்ததாவது, நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தற்போது தென்காசி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அத்தியாவசிய தேவையின்றி மக்கள் மளிகை, காய்கறி கடைகளில் கூட்டம் கூடுவதை தீவிர வேண்டும் என்றும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here