இன்றைய உலகில் பலரும் சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோவை பார்த்து அதே போல் நாமும் செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த 14 வயது சிறுவன் ஹாரிஸ் வோலோபா டிக் டாக்கில் பிரபலமான Spicy One Chip சேலஞ்ச் வீடியோவை அடிக்கடி பார்த்துள்ளார். பின் இந்த Spicy One Chip சேலஞ்ச் சமீபத்தில் பிரபலமாகிய நிலையில் அந்த சிறுவன் தானும் செய்ய நினைத்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதேபோன்று அந்த சிப்ஸை வாங்கி ஆசையுடன் சாப்பிட்டுள்ளார். ஆனால் அதுவே அவருக்கு வினையாக மாறிவிட்டது. அதாவது சிப்ஸ் சாப்பிட்ட சில மணி நேரத்திலே அந்த சிறுவனுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸார்கள் உண்மையாகவே சிப்ஸ்னால தான் சிறுவன் உயிரிழந்தானா இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை செய்து வருகின்றனர்.
மக்களே அலர்ட்.., இந்த பகுதியில் அடுத்த 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.., வெளியான பகீர் அறிவிப்பு!!!