சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிரொலி – 133 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியமைக்க பன்வாரிலாலிடம் உரிமை கோரிய ஸ்டாலின்!!

0

தி.மு.க. கட்சி தலைவரான மு.க. ஸ்டாலின் தன் 133 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்திடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

ஸ்டாலின் முதல்வராகிறார்

நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க 133 தொகுதியில் வெற்றி பெற்றது. இது தொடர்ந்து தி.மு.க உறுப்பினர்கள் சட்ட மன்ற கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற தி.மு.க எம்.எல்.ஏ களும் உதய சூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த பேரவையை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தார். தி.மு.க பொதுச்செயலாளர் துரை முருகன் முன்மொழிய, திமுக முதன்மை செயலாளர் கோ.என்.நேரு வழிமொழிந்தார். இந்த கூட்டத்தில் சட்ட மன்ற தேர்தலில் திமுக சார்பாக வெற்றி பெற்ற 133 எம்.எல்.ஏ களும் ஒரு மனதாக மு.க. ஸ்டாலினை சட்டமன்ற கட்சி தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

இந்திய பொதுநல சேவகர் டிராபிக் ராமசாமி மரணம் – அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

இதை தொடர்ந்து வெற்றி பெற்ற 133 எம்.எல்.ஏகளும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். பின் புதிய அமைச்சரவையில் பங்கேற்க உள்ள அமைச்சர்களின் பெயர் பட்டியலை ஸ்டாலின் தமிழக ஆளுநரிடம் வழங்கினார் . வரும் வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here