ரேஷன் கடைகளில் வழங்கவுள்ள 13 வகை மளிகை பொருட்கள் என்னென்ன? அளவு எவ்வளவு?.. முழு விவரம் இதோ!!!!

0

கொரோனா நிவாரணமாக ரேசன் கடைகளில் 13 வகையான மளிகைப் பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 13 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஜூன் முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கில் 13 வகை பொருட்களை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

13 வகை பொருட்கள் அடங்கிய தொகுப்பின் விவரம்:

  • கோதுமை மாவு- 1 கிலோ
  • உப்பு – 1 கிலோ
  • ரவை – 1 கிலோ
  • சர்க்கரை – 1/2 கிலோ
  • உளுத்தம் பருப்பு – 1/2 கிலோ
  • புளி – 250 கிராம்
  • துவரம் பருப்பு – 250 கிராம்
  • கடுகு – 100 கிராம்
  • சீரகம் – 100 கிராம்
  • மஞ்சள் தூள் – 100 கிராம்
  • மிளகாய் தூள் – 100 கிராம்
  • குளியல் சோப் – 1 (125 கிராம்)
  • சலவை சோப் – 1 (250 கிராம்)

முதல்வரின் இந்த அறிவிப்பால் தமிழகத்தில் மொத்தமுள்ள 2 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 798 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பாக்கப்டுகிறது. ஜூன் மாதம் முதல் இதனை அளிக்க கூட்டுறவு மற்றும் உணவுத் துறைக்கு, தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here