தமிழக பொது மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கொடுப்பதற்கு அரசு மற்றும் மின் வாரியத் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மாதந்தோறும் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை பராமரிப்பு பணிகள் மூலம் சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பணிகள் நடைபெறும் போது ஊழியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக மின் தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின் வாரிய துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எரமநாயக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, சிந்தலவாடம்பட்டி, கோம்பைப்பட்டி, சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, போடுவார்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டினம்புதூர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்ய இருப்பதாக மின் வாரியத் துறை தெரிவித்துள்ளது.
2024 பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு டிக்கெட் இந்த நாளில் விநியோகம்., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!!