’12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்’ – பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

0

கொரோனா பேரிடரால் தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் 12 ஆம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கொரோனா பரவலுக்கு மத்தியில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. 1 வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் யாவும் மூடப்பட்டிருந்தன. மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு மேலும் சில வகுப்புகள் தொடங்கப்பட்டிருந்தது.

கல்லூரிகளும் திறக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா?? என்ற கேள்வி எழுந்து வந்தது. தற்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் முடிவில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி.

300 பயிற்சி மருத்துவர்கள் கொரோனா தடுப்பு பணியில் நியமனம் !!!

மேலும் அந்த கூட்டத்தில் தேர்வு நடத்தலாமா?? ஒத்திவைக்கலாமா?? அல்லது ரத்து செய்யலாமா?? என்று விவாதிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது கண்டிப்பாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும், கொரோனா கணிசமான அளவில் குறையும் பொது மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியான பிறகு தான் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here