600க்கு 514 மதிப்பெண் பெற்ற மாணவி.., +12 தேர்வில் தோல்வி.., ஏகப்பட்ட குளறுபடிகளுடன் வெளியான தேர்வு முடிவு!!

0
600க்கு 514 மதிப்பெண் பெற்ற மாணவி.., +12 தேர்வில் தோல்வி.., ஏகப்பட்ட குளறுபடிகளுடன் வெளியான தேர்வு முடிவு!!

தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 23 தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தது. இதில் தேர்வு எழுதிய மாணவர்கள் 94. 03 % பேர் தேர்ச்சி பெற்றிந்தனர். பொதுவாக அரசு நடத்தும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது பள்ளிப்படிப்பை விட்டு இடைநிறுத்தம் செய்த மாணவர்களும், அரசின் வழிகாட்டுதலின் இந்த தேர்வை எழுதி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்தவகையில் மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஆர்த்தி என்ற தனிதேர்வர் இந்த தேர்வை எழுதியுள்ளார். இவர் தனது 11 ஆம் வகுப்பை முடித்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் முடித்து கொண்டுள்ளார். இதனால் இந்த வருடம் 12 ஆம் வகுப்பு பொது தேர்வினை வீட்டிலிருந்த படியே படித்து எழுதியுள்ளார். இந்த நிலையில் தனது தேர்வு முடிவை எதிர்பார்த்து இருந்த ஆர்த்திக்கு இந்த தேர்வு முடிவு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அடேங்கப்பா.., நடிகை தேவயானி மகள் +2வில் இவ்வளவு மதிப்பெண்ணா?., குவியும் வாழ்த்து மழை!!

அதாவது 600 க்கு 514 மதிப்பெண்கள் பெற்ற இவர் 4 பாடத்தில் fail என ரிசல்டடில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் தமிழில் 100க்கு 138 பெற்றுள்ளதாக வெளியான முடிவை கண்ட மாணவி ஆர்த்தி பெற்று குழப்பத்தில் இருந்து வருகிறார். இப்படி குளறுபடியான இந்த தேர்வு முடிவால் இந்த தனித்தேர்வர் தனது மேற்படிப்பை மேற்கொள்ள முடியாத குழப்பமான சூழ்நிலையில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here