+2 மாணவர்களே – மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – தேர்வாணையம் அறிவிப்பு!!

0
+2 மாணவர்களே - மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வாணையம் அறிவிப்பு!!
+2 மாணவர்களே - மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வாணையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 8,03,385 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல் 47,934 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். எனவே தேர்ச்சி மற்றும் தோல்வி அடைந்த மாணவ மாணவியர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் தாங்கள் கல்வி கற்ற பள்ளிகள் வாயிலாகவும் அல்லது தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் இன்று (09.6.2023) முதல் 13.05.2023 (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.

உங்கள் ஆதாரில் பிழை உள்ளதா.., அப்போ உடனே க்யூ.ஆர் கோர்டை ஸ்கேன் பண்ணுங்க.., சூப்பர் Information இதோ!!!

மேலும் ஒவ்வொரு பாடத்திற்குரிய விடை தாள் நகல் வேண்டும் என்றால் ரூ 275 கட்ட வேண்டும். அதே போல் மறுகூட்டல் செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ 205 கட்ட வேண்டும். ஆனால் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ 305 கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here