12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவு சீட்டு வேலிடப்பட்டது – தேர்வு தேதிகளும் அரசு அறிவித்துள்ளது!!!

0
12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவு சீட்டு வேலிடப்பட்டது - தேர்வு தேதிகளும் அரசு அறிவித்துள்ளது!!!
12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவு சீட்டு வேலிடப்பட்டது - தேர்வு தேதிகளும் அரசு அறிவித்துள்ளது!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பின் துணை தேர்வு மற்றும் தனித்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வு நுழைவு சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இணையதளம் மூலம் தங்களது தேர்வு நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு…

தமிழகத்தில் ஜூலை 19ஆம் தேதி 12ம் வகுப்பின் பொது தேர்வின் முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் வெளி வந்தது. அதில் மாணவர்கள் சிலர் மதிப்பெண் மிகவும் குறைவாக இருக்கிறது எனவே துணை தேர்வு நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர், மாணவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு துணை தேர்வு மற்றும் தனித்தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு தேர்வுத்துறை ஒப்புதல் அளித்தது. இந்த தேர்வு பற்றி அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வின் முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் கடந்த ஜூலை மாதம் வந்தது.

12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு...
12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு…

அதில் கூறிவந்த மதிப்பெண் பெட்ரா மாணவர்கள் மீண்டும் துணை தேர்வு எழுதுவதற்கு ஜூலை 23ஆம் தேதியில் இருந்து 19ஆம் தேதி வரை விண்ணப்பித்து வந்தனர். அதேபோல் தனித்தேர்வர்கள் கடந்த மே மாதமே துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார், இந்நிலையில் மாணவர்களுக்கான துணைத் தேர்வு வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியில் இருந்து 19ஆம் வரை நடைபெற உள்ளது. எனவே தனித்தேர்வர்கள் மற்றும் துணை தேர்வு எழுதும் மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நுழைவு சீட்டை (ஹால் டிக்கெட்) ஆகஸ்ட் 1 அதாவது நாளை சனிக்கிழமை காலை 11 மணியளவில் இருந்து www.dge.tn.gov.in என்ற அரசு இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு...
12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு…

மாணவர்கள் பதிவிறக்கம் நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்த பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து நுழைவு சீட்டை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை விண்ணப்ப எண் இல்லாததால் நுழைவு சீட்டை பெற முடியாது என்றல் மாணவர்கள் எதுவும் அஞ்சாமல் அவர்களுக்கு அருகில் உள்ள மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் சென்று அவர்களது நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினார். அதேபோல் தேர்வு எழுதும் மாணவர்கள் துணைத்தேர்வில் பெரும் மதிப்பெண்களே 12ஆம் வகுப்பிற்கான இறுதி மதிப்பெண்கள் ஆகும் என்றும் அந்த அறிக்கையில் இயக்குனர் உஷாராணி தெரிவித்து இருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here