11 மாநிலத்தில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனவினால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை – சுகாதாரத்துறை பகிர் தகவல்!!

0
11 மாநிலத்தில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனவினால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - சுகாதாரத்துறை பகிர் தகவல்!!
11 மாநிலத்தில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனவினால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - சுகாதாரத்துறை பகிர் தகவல்!!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதன் எதிரொலியாக தற்போது 11 மாநிலத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தொற்று:

தினசரியாக சுமார் 3 லட்சத்தை தாண்டி வருகிறது இந்தியாவின் கொரோனா பாதிப்பு. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கையும் தற்போது 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது. நாட்டில் இதுவரை சுமார் 18.04 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்த பாடில்லை என்று தான் சொல்ல வேண்டும்.காரணம் நாளுக்கு நாள் பாதிப்படைபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் விகிதம் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை மாநில வாரியான கொரோனா தொற்றினால் சிகிச்சை பெறுபவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தொற்று:
கொரோனா தொற்று:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதன்படி இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், கர்நாடக உட்பட 11 மாநிலத்தில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.அதேபோல் 8 மாநிலத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிதிகமானவர்களும், 17 மாநிலத்தில் 50 ஆயிரத்திற்கு குறைந்தவர்களுக்கு கொரோனா சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவலினால் மக்கள் கடும் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல் நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் 36 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here