தமிழக 10 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.., உடனே இதுக்கு முன்பதிவு செய்யுங்கள்.., வெளியான அறிவிப்பு!!

0
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சில வாரங்களில் 10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வுகள் துவங்க உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாளை அந்த மாவட்டத்தில் உள்ள ஏ கே டி பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நேரடியாகவும், வீட்டில் இருந்தும் எழுதலாம் என தெரிவித்துள்ளனர். அதன்படி ஆன்லைன் மூலம் தேர்வு எழுதுபவர்கள் தேர்வு நேரத்தை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
பின் நேரில் எழுதும் மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் காலை 10 மணிக்கு தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்படும். மேலும் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் 10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். இந்த தேர்வில் பங்கேற்க நினைக்கும் மாணவர்கள் 63691 46590 என்ற மொபைல் எண் மற்றும் www.aktinstitutions.com என்று இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here