
தமிழகத்தில் இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஹால் டிக்கெட்
தமிழகம் மற்றும் புதுவையில் 12 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் 6 முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு முன் அறிவியல் படத்துக்கான செய்முறை தேர்வு வரும் மார்ச் 20 முதல் 24- ந் தேதி நடைபெற இருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த பொதுத் தேர்வை 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது என தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
ஆதார் எண்ணுடன் மின் எண்ணை இணைக்காதவர்களா?? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!!!
இவர் கூறியதாவது, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் தனித்தேர்வர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியாகுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தெளிப்படுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.