பள்ளிகளின் கட்டுப்பாடு, ஒழுங்குமுறையை உறுதி செய்ய வேண்டும்.., பா.ம.க. ராமதாஸ் அறிவுறுத்தல்!!

0
பள்ளிகளின் கட்டுப்பாடு, ஒழுங்குமுறையை உறுதி செய்ய வேண்டும்.., பா.ம.க. ராமதாஸ் அறிவுறுத்தல்!!
பள்ளிகளின் கட்டுப்பாடு, ஒழுங்குமுறையை உறுதி செய்ய வேண்டும்.., பா.ம.க. ராமதாஸ் அறிவுறுத்தல்!!

சென்னை மத்திய அரசுப் பள்ளியில் பயின்ற மாணவனை சக மாணவர்கள் அரை நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்துள்ளதை கண்டித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பள்ளிகளில் ஒழுங்குக் கட்டுப்பாட்டை உறுதிசெய்ய வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசுப் பள்ளி:

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் இருந்து அசோக் நகரில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வரும் மாணவனின் தந்தை கூத்துக்கட்டும் தொழில் செய்து வருகிறார். இந்த மாணவன் புதுச்சேரியிலிருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இப்பள்ளியில் சேர்ந்துள்ளார். வகுப்பில் சக மாணவர்கள் தந்தையின் தொழில் மற்றும் பேசும் மொழியை வைத்து அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மாணவன் இதை தன தந்தையிடம் கூற தந்தை பள்ளி ஆசிரியர்களிடம் கூறி கண்டித்துள்ளனர். ஆசிரியர்களிடம் புகார் செய்ததையடுத்து அந்த மாணவனை, சக மாணவர்கள் அரை நிர்வாண படுத்தி சுய இன்பம் செய்யுமாறு கூறி பிறப்புறுப்பை தாக்கி உள்ளனர். தாக்கப்பட்ட மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து மாணவனின் தந்தை காவல்துறையில் புகார் செய்துள்ளார். போலீசார் சக மாணவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி., தொடரும் இழுபறி! பொறுமையிழந்து போராட முடிவு!!

எத்தனையோ திரைப்படங்களிலும் சோசியல் மீடியாவிலும் இதுபோன்ற சம்பவங்களை கண்டித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அன்றாட வாழ்வின் நடைமுறையில் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன. இப்போதும் இந்த அவல நிலையை கண்டித்து சோசியல் மீடியாவில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதையறிந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பள்ளிகளில் ஒழுங்குக் கட்டுப்பாட்டை உறுதிசெய்யவும், கொடுமையை கண்டித்தும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here