10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒலி வடிவில் கல்வி – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

0

இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடி இருக்கும் நிலையில் பொது தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஒலி வடிவில் அகில இந்திய வானொலி மூலம் பாடங்கள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி கல்வித்துறை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் அனைத்தும் சுமார் ஒரு வருட காலமாக மூடிய நிலையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 2020-21 ஆம் கல்வி ஆண்டில் கொரோனா அச்சத்தை கருத்தில் கொண்டு மாணவர்கள் நலன் கருதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்து மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2021- 22 ஆம் கல்வி ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் காரணத்தால் சில மாநிலங்களில் மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. பெரும்பாலுமான இடங்களில் ஆன்லைன் வழி கல்வி நடத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் இணைய சேவை குறைவாக இருப்பதால் மாணவர்களால் ஆன்லைன் வழி கல்வியில் பயில தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

அமேசான் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ் – என்ன காரணம் தெரியுமா?

இந்நிலையில் அவர்கள் பயனடையும் வகையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒலி வாயிலாக அகில இந்திய வானொலி மூலம் பாடங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஒலி வாயிலாக வரும் ஜூலை 31 முதல் பாடங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை 20 நிமிடங்கள் வீதம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் 20 நிமிடம் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்த 3, 20 நிமிடம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடங்கள் எடுக்கப்படவுள்ளது என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here