Wednesday, March 27, 2024

100 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

Must Read

14 வயது சிறுவன், தன் வண்டியை அகற்ற ரூ.100 லஞ்சம் கொடுக்க மறுத்ததால் முட்டை வண்டியை மத்திய பிரதேசத்தை சேர்ந்த இந்தூர் குடிமை அமைப்பு அதிகாரிகள் கவிழ்த்ததாக கூறப்படுகிறது.

குடிமை அமைப்பு அதிகாரிகளின் செயல்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏழை, பணக்காரர் என பாராமல் அனைவரையும் கடுமையாக தாக்கியுள்ளது. இத்தகைய சமயத்தில் மத்யபிரதேசத்தை சேர்ந்த இந்தூரில், முட்டைகளை ஏந்திய 14 வயது சிறுவனின் வண்டியை மத்திய பிரதேச குடிமை அமைப்பு அதிகாரிகள் கவிழ்த்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வைரல் வீடியோ

14 வயது சிறுவன் இந்தூர் குடிமை அமைப்பு அதிகாரிகளுக்கு ரூ .100 லஞ்சம் கொடுக்க மறுத்ததால் அவனது வண்டியை கவிழ்த்ததாக குற்றம் சாட்டினான்.சாலையில் முட்டைகளை அடித்து நொறுக்கியதோடு, அவனது வண்டியையும் கவிழ்த்துள்ளனர்.

பாத்ரூமில் இளம் பெண்ணை சில்மிஷம் செய்யும் ஹீரோ – வியூஸ்களை அள்ளும் வெப்சீரிஸ்..!

சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் இந்த வீடியோவில், ‘தனது வண்டியை சாலையில் இருந்து அகற்றவோ அல்லது அவர்களுக்கு ரூ .100 கொடுக்கவோ மறுத்ததால் அதிகாரிகள் இவ்வாறு செய்ததாக அந்தச் சிறுவன் குற்றம் சாட்டினான்’.

தனது சிறிய கடை அழிக்கப்பட்ட நிலையில், கோபமடைந்த இளைஞன் இந்தூரில் குடிமை அமைப்பு அதிகாரிகளைக் கோபமாக சைகை செய்து தனது வேதனையை கோபமாக வெளிப்படுத்துவது வீடியோவில் காணப்படுகிறது.

வியாபாரிகள் வேண்டுகோள்

முன்னதாக, இந்தூர் மாவட்ட ஆட்சியர் மணீஷ் சிங், இந்தூர் நகரில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு “இடது-வலது” முறை அறிமுகப்படுத்தினார்.
இதன் கீழ், சாலையின் வலதுபுறத்தில் உள்ள கடைகள் ஒரு நாளிலும், அதைத் தொடர்ந்து மறுநாளில் மறுபுறபுறத்தில் உள்ள கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என ஆணை பிபறப்பிக்கப்பட்ருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சிறு தொழில்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ள நிலையில்,  தெரு விற்பனையாளர்களை இனி துன்புறுத்த வேண்டாம் என்று எம்.பி. அரசை வியாபாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மீண்டும் கேப்டனாகும் பாபர் அசாம்.., பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி முடிவு!!!

நடப்பு ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடர் ஜூன் 4ம் தேதி முதல் 30ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்நிலையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -