தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி – வேதாந்தா நிறுவனம் தகவல்!!

0

இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி குறித்த தகவலை வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்தி:

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக ஆகிசிஜன் இன்றி தவித்து வருகின்றனர். ஏற்கனவே மக்கள் அனைவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது மக்கள் அனைவரும் பெரிதும் வேதனை அடைந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என்றும் எனவே அதனை திறக்க அனுமதி வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் மனு வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.

‘சென்னையில் மேலும் 40% கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரிக்கும்’ – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

இதில் பெரும்பாலானோர் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் திறப்பதற்காக தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில் வேதாந்தா நிறுவனம், ஆலையில் ஏற்படும் ஆக்சிஜன் உற்பத்தி குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆலையில் 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் இருப்பதாகவும், பிற மாநிலங்களில் ஆக்சிஜன் விநியோகம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here