10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் இனி சிறை தண்டனை தான் – அரசின் அதிரடி முடிவு!!

0
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் இனி சிறை தண்டனை தான் - அரசின் அதிரடி முடிவு!!
10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் இனி சிறை தண்டனை தான் - அரசின் அதிரடி முடிவு!!

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் எந்த இடத்தில் வாங்க மறுக்கப்பட்டாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

10 ரூபாய் நாணயங்கள்:

இந்தியாவில் 10 ரூபாய் நாணயங்கள், சிறு கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை வாங்க மறுக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். அதாவது ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்கள் அங்கீகரிக்கப்பட்டவை என பல முறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும் பலர் தங்களுடைய அறியாமையால்10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி மக்கள் மத்தியில் பெருமளவில் பரவி உள்ளது தான்.

ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – இந்த ஒன்னு போதும்! இனி வாழ்க்கை முழுவதும் இலவசம் தான்!!

அதாவது, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயம் வெவ்வேறு டிசைன்களில் உள்ளது, இதனால் இந்த நாணயம் போலியாக இருக்குமோ என்று நினைத்து, கடைகளிலோ, பேருந்துகளிலோ,அளித்தால், அவை வாங்கப்படுவதில்லை. மேலும் 10 ரூபாய் நாணயங்களை அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களே வாங்க மறுக்கின்றன என்பது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. எனவே, இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கொண்டு வரும் வகையில், தற்போது இந்தியன் ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வரிசையில், தற்போது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயங்களுமே அங்கீகரிக்கப்பட்டவை, எனவே அவற்றை செல்லாது என சொல்வதோ, மேலும் வாங்கவோ கொடுக்கவோ மறுப்பது இந்திய தண்டனைச் சட்டம் 124A வின் படி குற்றம் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த குற்றத்திற்கு 3 வருட சிறை தண்டனையும் அபராதமும் வழங்கப்படும். இதனை தொடர்ந்து 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் கடைகளின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here