
தமிழகம் முழுவதும் 11, 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று முன்தினம் முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மேல்நிலை வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 5 ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன்பின் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 முதல் தொடங்க உள்ளதால் பல்வேறு நடவடிக்கைகளை தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. இதில் இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக ஆயிரக்கணக்கான தனித்தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
தற்போது இவர்களுக்கான பதிவெண்களுடன் கூடிய ஹால் டிக்கெட் குறித்த முக்கிய அறிவிப்பை தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 17ம் தேதி முதல் https://dge.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என வலியுறுத்தியுள்ளது.