
நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் 1.20 லட்சத்திற்கும் மேலான பள்ளி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், “ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்குவது வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை இதோடு நிற்காமல் இனி வரும் காலங்களில் இன்னும் வேகமெடுத்து, அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.