சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சன் ஃபிஷ் மேரி பிஸ்கட் வாங்கியுள்ளார். அந்த பிஸ்கட் பாக்கெட் கவரில் 16 பிஸ்கட்கள் இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் உள்ளே வெறும் 15 பிஸ்கட்கள் தான் இருந்துள்ளது. இதனால் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என டில்லி பாபு கடைக்காரர் மற்றும் ITC நிறுவனத்திடம் கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால் இதற்கு பதில் கிடைக்காத நிலையில் அவர் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்த நிலையில் ITC நிறுவனம் தரப்பிலிருந்து ஒரு நாளைக்கு 50 லட்சம் பிஸ்கட்களை தயாரிக்கிறோம்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆனால் இந்த பிஸ்கட் பாக்கெட்டை 76 கிராம் என்ற எடை அடிப்படையில் தான் நிர்ணயம் செய்கிறோம். பாக்கெட்டுக்கு உள்ளே உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் கிடையாது என விவாதம் செய்துள்ளனர். இதை ஏற்க மறுத்த நுகர்வோர் நீதிமன்றம் கிராம அடிப்படையில் பிஸ்கட் பாக்கெட்டை விற்பனை செய்தால் பிறகு ஏன் பாக்கெட்டின் வெளிப்புறத்தில் 16 என குறிப்பிட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு ITC சரியான விளக்கம் அளிக்காத நிலையில் வழக்குத் தொடர்ந்த டெல்லி பாபுவுக்கு ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்பளித்துள்ளனர். மேலும் ஒரு பிஸ்கட்டுக்காக வழக்கு தொடர்ந்த டெல்லி பாபுவுக்கு ஒரு லட்சம் ஜாக்பாட் அடித்து விட்டது என பலரும் சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு., இந்த தவற மட்டும் செஞ்சிடாதீங்க!!!