1.70 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!!

0
1.70கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!!
1.70கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!!

யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் இதுவரை எவ்வளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதுவரை கையிருப்பில் எவ்வளவு தடுப்பூசிகள் இருக்கின்ற என்ற கணக்கை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் எண்ணிக்கை…

கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பின் கொரோனா பரவலை படிப்படியாக குறைத்து கொண்டு வருகின்றோம். இந்நிலையில் மக்களை அனைவர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியையே அதிகரிக்க கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்க தடுப்பூசிகளை போடச்சொல்லி அரசு அறிவுறுத்தி வருகிறது. எனவே ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று இந்திய அரசு அறிவித்தது. அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர், இந்நிலையில் சில மாநிலங்களில் தடுப்பூசிகள் தட்டுப்பாடாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் எண்ணிக்கை...
கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் எண்ணிக்கை…

மக்கள் தடுப்பூசி இல்லாமல் தத்தளித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய சுகாதர துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில் தடுப்பூசி அதிகளவில் பயன்படுத்திய நாடுகளின் தர வரிசை பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்தியா தான் என்று கூறுகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை 38.18கோடி தடுப்பூசிகளை மாநிலங்கக்ளுக்கும் 23,80,080 தடுப்பூசிகளை யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. அதில் இதுவரை 36,48,77,756 தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தப்பட்டதாகவும், மீதம் 1.70கோடி அதாவது 1,70,19,854 தடுப்பூசிகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது, 40,23,173 பேருக்கு தடுப்பூசிகள் கடந்த 24 மணிநேரத்தில் போடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here