கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை – தனியார் மருத்துவமனை ஊழியர் கைது!!

0

கொரோனா தொற்றின் இறுதி நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் இருக்கும் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்து ரெம்டெசிவிர். தற்போது மதுரையில் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து:

கொடிய வைரஸான கொரோனா இறுதி நிலையில் உயிரை காக்கும் மருந்தான ரெம்டெசிவிர் வாங்க மக்கள் அலைமோதுகின்றனர். இம்மருந்து துவக்கத்தில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் பின் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகமாக இருப்பதனால் அதனை அடுத்து, நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து இடங்களில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகமாக இருப்பதனால் தற்போது அதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். மதுரையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்த தனியார் மருத்துவமனை ஊழியர் இர்பான் கான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனாவால் இறந்தவர்களின் மருந்து சீட்டை பயன்படுத்தி ரெம்டெசிவர் மருந்து வாங்கி கள்ளசந்தையில் விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது. மேலும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த தடுப்பு மருந்தை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here