கீழடியில் அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட 2 குழந்தைகளின் எலும்பு கூடுகள் , பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன

0

ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் பழங்கால தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் எலும்பு கூடு ஆய்வுக்காக மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திற்கு (எம்.கே.யூ) அனுப்பப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அகழ்வாராய்ச்சியில் இரண்டு தாழிகளுக்கு இடையில் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்திலிருந்து இதுவரை மூன்று தாழிகள் தோண்டப்பட்டுள்ளன.

“சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்று 95 செ.மீ நீளம் கொண்டது, மற்றொன்று கடந்த மாதம் கண்டுஎடுக்கப்பட்டது . அது 75 செ.மீ ஆகும். இரு குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அருகருகிலேயே காணப்பட்டன, அவை அகற்றப்பட்டு பகுப்பாய்வுக்காக எம்.கே.யுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்று தமிழ்நாட்டின் துணை இயக்குநர் மாநில தொல்பொருள் துறை ஆர்.சிவானந்தம் கூறினார்.

“விஞ்ஞான வல்லுநர்கள் வயது, பாலினம் மற்றும் பிற விவரங்களை ஆராய்ந்து தீர்மானிப்பார்கள் … அவற்றை எம்.கே.யுவிடம் ஒப்படைத்துள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.

கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய மூன்று அண்டை கிராமங்களை உள்ளடக்கிய ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சியை , இந்த ஆண்டு பிப்ரவரியில் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முறையாக திறந்து வைத்தார்.

கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சிகள் மூலம் இது சுமார் 2,600 ஆண்டுகள் பழமையான நகர்ப்புற நாகரிகங்களில் ஒன்று என்று தெரிய வந்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here